என் பேர் தான் என்ன?

Image
பெண்ணியம் பேசப்படுவதை   கேட்டுக்கொண்டிருக்கும் போதே  உணர்ச்சி பொங்கியது  சட்னி  அரைக்க  மிக்சியை வேகமாக  ஓட விட்டேன்.  பொங்கிய வேகத்தில்  அடங்கியது  சமயலறையில்  பெண்ணியம்  சூழலியல்  பேசப்படுவதை  கேட்க்கும் போதே   புளிரசம் வைக்க பட்டது , எனக்கு  என்ன  தெரியும்  எவ்வளவு தெரிந்தால் தான் என்ன?  சமையலறை சொந்தக்காரிக்கு  கரண்டிகள்  கை மாறாத வரை என்ன  தெரிந்தால் என்ன எவ்வளவு தெரிந்தால் என்ன?  எனக்கென்ன  இருக்கு  எங்கே இருக்கு   என்  அடையாளம்  என்  பேர்  தான்  என்ன?   

மாட்டு வண்டி

  • இரட்டை மாட்டு பூட்டிய  வண்டியில் ஆடி  ஆடி  போறதே   ஆனந்தம் தான்அப்பா பின்னாடி  யாரு முன்னாடி யாரு உட்காரனு சண்டை  போட்டு   வெள்ளை  கருப்பு  எருது பூட்டின வண்டியில  எப்பவாது  போவோம் , சொந்த ஊருல ஆட்டம் பாக்க, மாவு அரைக்க, சினிமா பாக்க, மருத்துவம் பாக்க   எல்லாத்துக்கும்  மாட்டு வண்டி தான் , ஆடி  காரு  அப்போ பழுது பார்த்து பெயிண்ட் அடிச்ச வண்டிய பாத்துகிட்டே இருக்கலாம் சக்கரத்து மேலே ஏறி முன்னே வந்து கிழ இறஙகி  விளையாடி, மாடில்லா வண்டியில்  நுகத்தடியில ஆட்டம் அட எல்லாத்துக்கும்   மாட்டு வண்டித் தான், எங்கும் போகலானா  மாமரத்தடியில நிற்கும் போது டிக்கெட் போட்டு   அமெரிக்க, ஆப்பிரிக்கா எங்க  வேணுமானாலும் போகும்.  மாட்டு வண்டிய மறக்க முடியல..  காலம்மாறியது கனவாய் போன  அழகான வாழ்வு  ..

Comments

Popular posts from this blog

மழை

நீ எனக்கு

என் பேர் தான் என்ன?