என் பேர் தான் என்ன?
பெண்ணியம் பேசப்படுவதை கேட்டுக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சி பொங்கியது சட்னி அரைக்க மிக்சியை வேகமாக ஓட விட்டேன். பொங்கிய வேகத்தில் அடங்கியது சமயலறையில் பெண்ணியம் சூழலியல் பேசப்படுவதை கேட்க்கும் போதே புளிரசம் வைக்க பட்டது , எனக்கு என்ன தெரியும் எவ்வளவு தெரிந்தால் தான் என்ன? சமையலறை சொந்தக்காரிக்கு கரண்டிகள் கை மாறாத வரை என்ன தெரிந்தால் என்ன எவ்வளவு தெரிந்தால் என்ன? எனக்கென்ன இருக்கு எங்கே இருக்கு என் அடையாளம் என் பேர் தான் என்ன?