Posts

Showing posts from June, 2020

என் பேர் தான் என்ன?

Image
பெண்ணியம் பேசப்படுவதை   கேட்டுக்கொண்டிருக்கும் போதே  உணர்ச்சி பொங்கியது  சட்னி  அரைக்க  மிக்சியை வேகமாக  ஓட விட்டேன்.  பொங்கிய வேகத்தில்  அடங்கியது  சமயலறையில்  பெண்ணியம்  சூழலியல்  பேசப்படுவதை  கேட்க்கும் போதே   புளிரசம் வைக்க பட்டது , எனக்கு  என்ன  தெரியும்  எவ்வளவு தெரிந்தால் தான் என்ன?  சமையலறை சொந்தக்காரிக்கு  கரண்டிகள்  கை மாறாத வரை என்ன  தெரிந்தால் என்ன எவ்வளவு தெரிந்தால் என்ன?  எனக்கென்ன  இருக்கு  எங்கே இருக்கு   என்  அடையாளம்  என்  பேர்  தான்  என்ன?   

மாட்டு வண்டி

இரட்டை மாட்டு பூட்டிய  வண்டியில் ஆடி  ஆடி  போறதே   ஆனந்தம் தான்அப்பா பின்னாடி  யாரு முன்னாடி யாரு உட்காரனு சண்டை  போட்டு   வெள்ளை  கருப்பு  எருது பூட்டின வண்டியில  எப்பவாது  போவோம் , சொந்த ஊருல ஆட்டம் பாக்க, மாவு அரைக்க, சினிமா பாக்க, மருத்துவம் பாக்க   எல்லாத்துக்கும்  மாட்டு வண்டி தான் , ஆடி  காரு  அப்போ பழுது பார்த்து பெயிண்ட் அடிச்ச வண்டிய பாத்துகிட்டே இருக்கலாம் சக்கரத்து மேலே ஏறி முன்னே வந்து கிழ இறஙகி  விளையாடி, மாடில்லா வண்டியில்  நுகத்தடியில ஆட்டம் அட எல்லாத்துக்கும்   மாட்டு வண்டித் தான், எங்கும் போகலானா  மாமரத்தடியில நிற்கும் போது டிக்கெட் போட்டு   அமெரிக்க, ஆப்பிரிக்கா எங்க  வேணுமானாலும் போகும்.  மாட்டு வண்டிய மறக்க முடியல..  காலம்மாறியது கனவாய் போன  அழகான வாழ்வு  ..

நட்பு

நட்பு  என்பது  என்ன   உணர்வு  ரீதியாக  வருவதா? சக  பாலினம்  ஏன்  எதிர் பாலினமாக  மாறி போனது . உடல்  சார்ந்த  ஈர்ப்புகள்  கடந்து  உள்ள கிடக்கைகளை  வெளிகொணர  நட்பே  கிடைக்காதா? கூடுமின்பம்  தேவையில்லை  இங்கே  உணர்வு  கூட்டமே  தேவை.  அது  ஏன்  உனக்கு  தோழன்  தான்  வேண்டுமா..எனில்  என் பதில்  நட்பில்  ஏது  ஆண்  பெண்  நட்பே  பாலினம் தாண்டிய  புரிதலால்  வருவது  தானே.   அதியமானுக்கும் அவ்வைக்கும்  இருந்த  நட்பு பாலினம்  கடந்த புரிதல் தானே. கேட்டால் அவளுக்கும் அதியமானுக்கும்  வயது  வேற்றுமை  உண்டு  என்பார்கள். ஏனோ  இந்த உணர்வு  புதிதல்ல  ஆண்  ஆணாக  பழக விரும்புகிறான்  பெண்  பெண்ணாக  இல்லாமல்  பாலினம்  தாண்டி உணர கூடாது  உணர்ந்து விடில் நெறி அற்றவள் அவளே .

பிறந்தநாள்

நான்  மூன்று  வயதில்  தாய்  ஆனேன் .. நீ பிறந்த அன்று  உன்  பிஞ்சு  முகம்  நினைவில்லை  உன் விரல்  பிடித்து  விளையாடிருப்பேன்  பழைய  நிழற்படத்தில்  என் பின்  ஒளியும் நீ  உனக்கும்  எனக்குமான உறவு  தாய் மகளே  நான்  சண்டை   போடுகையில்  மவுனமே நீ  உன்னை  நான் ஏமாற்றுவது  தெரிந்தும்  ஏமாறுவாய் நீ  என்  அழுகையின்  ஆறுதல்  நீ   நான்  என்ன சொன்னாலும்  கேக்கும் செவி நீ  என் பிள்ளைக்கும்  சேர்த்து   தாயனாய்  நீ  நான்  படித்த  பட்டங்கள்  யாவும்  தந்தவள் நீ   மணமாகி நீ போகையில்  மரண வலி அது  இன்றும்  மாறவில்லை . யாரோ  உன்னை  மனைவி  என்றாலும். மருமகள் என்றாலும்....    இன்றும்  தாய்  சேய் உறவு உனக்கும்  எனக்கும்....