Posts

Showing posts from July, 2020

என் பேர் தான் என்ன?

Image
பெண்ணியம் பேசப்படுவதை   கேட்டுக்கொண்டிருக்கும் போதே  உணர்ச்சி பொங்கியது  சட்னி  அரைக்க  மிக்சியை வேகமாக  ஓட விட்டேன்.  பொங்கிய வேகத்தில்  அடங்கியது  சமயலறையில்  பெண்ணியம்  சூழலியல்  பேசப்படுவதை  கேட்க்கும் போதே   புளிரசம் வைக்க பட்டது , எனக்கு  என்ன  தெரியும்  எவ்வளவு தெரிந்தால் தான் என்ன?  சமையலறை சொந்தக்காரிக்கு  கரண்டிகள்  கை மாறாத வரை என்ன  தெரிந்தால் என்ன எவ்வளவு தெரிந்தால் என்ன?  எனக்கென்ன  இருக்கு  எங்கே இருக்கு   என்  அடையாளம்  என்  பேர்  தான்  என்ன?   

நீ எனக்கு

Image
மென்மையிலும் மென்மை  உணர்வே  புத்தகத்தில்  ஒளித்து  வைத்த  மயிலிறகு  பூவினை தொடும் உணர்வு   கோடை  தென்றலின்  காலை  கால் தொடும்  முதல் கடலை உணர்வு  புன்னகை  தக்க வைக்கும் நினைவு   இதுவே  போல  அழகான ஆயிரம்  உணர்வு  நீ   இதுவென  உன்னை  எப்படி சொல்லுவேன்  எது  சொன்னாலும்  அது  குறுகி  போகிறதே .. எல்லையில்லா  மாயக்கனவு  நான்  தொலைந்து போக துடிக்கும்  கணம் .

நீ

Image
மின் மினி பூச்சியின் ஒளி  வெளிச்சத்தின்   உற்சாகமே  நீ  இரவு  நேரத்தின்  வானமே  வானத்தில் விழும்  எறிமீனே  பிச்சிப்பூவின்  புற வண்ணமே  மருதாணி  பூவின்  வாசமே   அந்தி மயக்கத்தின் கிறுக்கம் நீ   தட்டாமாலை மாலை  சுற்றும்  கிறுகிறுப்பே  நீ  நீ தான்  ஆனந்த வெளி... 

மழை

தேர்விற்கு தயாராகும்  மாணவனாய்,  மழைக்கு  தயாராகும்  வானம்   ஒன்று தான்  முழுவதும்  பொழிவதில்லை.