என் பேர் தான் என்ன?
கேட்டுக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சி பொங்கியது சட்னி அரைக்க மிக்சியை வேகமாக ஓட விட்டேன்.
பொங்கிய வேகத்தில் அடங்கியது சமயலறையில் பெண்ணியம்
சூழலியல் பேசப்படுவதை கேட்க்கும் போதே புளிரசம் வைக்க பட்டது , எனக்கு என்ன தெரியும் எவ்வளவு தெரிந்தால் தான் என்ன?
சமையலறை சொந்தக்காரிக்கு
கரண்டிகள் கை மாறாத வரை என்ன தெரிந்தால் என்ன எவ்வளவு தெரிந்தால் என்ன?
எனக்கென்ன இருக்கு எங்கே இருக்கு
என் அடையாளம்
என் பேர் தான் என்ன?
Comments
Post a Comment