என் பேர் தான் என்ன?

Image
பெண்ணியம் பேசப்படுவதை   கேட்டுக்கொண்டிருக்கும் போதே  உணர்ச்சி பொங்கியது  சட்னி  அரைக்க  மிக்சியை வேகமாக  ஓட விட்டேன்.  பொங்கிய வேகத்தில்  அடங்கியது  சமயலறையில்  பெண்ணியம்  சூழலியல்  பேசப்படுவதை  கேட்க்கும் போதே   புளிரசம் வைக்க பட்டது , எனக்கு  என்ன  தெரியும்  எவ்வளவு தெரிந்தால் தான் என்ன?  சமையலறை சொந்தக்காரிக்கு  கரண்டிகள்  கை மாறாத வரை என்ன  தெரிந்தால் என்ன எவ்வளவு தெரிந்தால் என்ன?  எனக்கென்ன  இருக்கு  எங்கே இருக்கு   என்  அடையாளம்  என்  பேர்  தான்  என்ன?   

நட்பு

நட்பு  என்பது  என்ன  
உணர்வு  ரீதியாக  வருவதா? சக  பாலினம்  ஏன்  எதிர் பாலினமாக  மாறி போனது . உடல்  சார்ந்த  ஈர்ப்புகள்  கடந்து  உள்ள கிடக்கைகளை  வெளிகொணர  நட்பே  கிடைக்காதா? கூடுமின்பம்  தேவையில்லை  இங்கே  உணர்வு  கூட்டமே  தேவை.  அது  ஏன்  உனக்கு  தோழன்  தான்  வேண்டுமா..எனில்  என் பதில்  நட்பில்  ஏது  ஆண்  பெண்  நட்பே  பாலினம் தாண்டிய  புரிதலால்  வருவது  தானே.   அதியமானுக்கும் அவ்வைக்கும்  இருந்த  நட்பு பாலினம்  கடந்த புரிதல் தானே. கேட்டால் அவளுக்கும் அதியமானுக்கும்  வயது  வேற்றுமை  உண்டு  என்பார்கள். ஏனோ  இந்த உணர்வு  புதிதல்ல  ஆண்  ஆணாக  பழக விரும்புகிறான்  பெண்  பெண்ணாக  இல்லாமல்  பாலினம்  தாண்டி உணர கூடாது  உணர்ந்து விடில் நெறி அற்றவள் அவளே .

Comments

Post a Comment

Popular posts from this blog

மழை

நீ எனக்கு

என் பேர் தான் என்ன?