என் பேர் தான் என்ன?

Image
பெண்ணியம் பேசப்படுவதை   கேட்டுக்கொண்டிருக்கும் போதே  உணர்ச்சி பொங்கியது  சட்னி  அரைக்க  மிக்சியை வேகமாக  ஓட விட்டேன்.  பொங்கிய வேகத்தில்  அடங்கியது  சமயலறையில்  பெண்ணியம்  சூழலியல்  பேசப்படுவதை  கேட்க்கும் போதே   புளிரசம் வைக்க பட்டது , எனக்கு  என்ன  தெரியும்  எவ்வளவு தெரிந்தால் தான் என்ன?  சமையலறை சொந்தக்காரிக்கு  கரண்டிகள்  கை மாறாத வரை என்ன  தெரிந்தால் என்ன எவ்வளவு தெரிந்தால் என்ன?  எனக்கென்ன  இருக்கு  எங்கே இருக்கு   என்  அடையாளம்  என்  பேர்  தான்  என்ன?   

பிறந்தநாள்

நான்  மூன்று  வயதில்  தாய்  ஆனேன் ..
நீ பிறந்த அன்று 
உன்  பிஞ்சு  முகம்  நினைவில்லை 
உன் விரல்  பிடித்து  விளையாடிருப்பேன் 
பழைய  நிழற்படத்தில்  என் பின்  ஒளியும் நீ 
உனக்கும்  எனக்குமான உறவு  தாய் மகளே 
நான்  சண்டை   போடுகையில்  மவுனமே நீ 
உன்னை  நான் ஏமாற்றுவது  தெரிந்தும்  ஏமாறுவாய் நீ 
என்  அழுகையின்  ஆறுதல்  நீ  
நான்  என்ன சொன்னாலும்  கேக்கும் செவி நீ 
என் பிள்ளைக்கும்  சேர்த்து   தாயனாய்  நீ 
நான்  படித்த  பட்டங்கள்  யாவும்  தந்தவள் நீ  
மணமாகி நீ போகையில்  மரண வலி அது  இன்றும்  மாறவில்லை .
யாரோ  உன்னை  மனைவி  என்றாலும். மருமகள் என்றாலும்....   
இன்றும்  தாய்  சேய் உறவு உனக்கும்  எனக்கும்....

Comments

Post a Comment

Popular posts from this blog

மழை

நீ எனக்கு

என் பேர் தான் என்ன?